‘மேனன்’ பட்டம் எப்படி வந்துச்சு.. நீ படிச்சு வாங்குனியா? இயக்குநர் கௌதம் மேனனுக்கு எதிராக கொந்தளித்த ப்ளு சட்டை மாறன்!!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2022, 6:21 pm
சமீபத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த வெந்து தணிந்தது காடு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். அவரது விமர்சனத்தில், பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம் என்றால், கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம்.
இதை நன்றாகவே கண்டுபிடித்த மக்கள் போன படத்திலேயே கலாய்த்து விட்டதால் இனி வாய்ஸ் ஓவர் கொடுத்தால் நம்மை கலாய்ப்பார்கள் என்று இந்த படத்தில் அப்பு குட்டி மூலமாக வாய்ஸ் ஓவரில் கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது கௌதம் மேனனுக்கு இன்னும் அந்த பைத்தியம் முழுதாக குணமாகவில்லை என்பது தெரிகிறது என்று கலாய்த்து இருந்தார்.
ஹீரோ ஒரு பெரிய டானாக மாறி வருகிறார் என்றதும் அவரை கொல்ல ஒரு பெரியபீசை ரெடி செய்கிறார்கள். அது யார் என்றால் விக்ரம் படத்தில் குட்டியாக லில்லி புட்டு போல மினி வாட்டர் போல வருவாரே அவரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஹீரோவை கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள் என்று ஜாபரை உருவத்தை கேலி செய்த ப்ளூ சட்டை, வீணா போனவன் எப்படி டான் ஆனான் என்பதை தான் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று இந்த படத்தை கழுவி ஊற்றி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கெளதம் மேனன், ப்ளூ சட்டை மாறன் குறித்து பேசும் போது, ப்ளூ சட்டை மாறன் மேல எனக்கு அவ்வளவு கடுப்பு. அவரது யூட்யூப் சேனலுக்கு ஸ்பான்சர் கிடைக்குறதுக்கும், அவருக்கு பணம் வர்றதுக்காகவும், ஒரு படத்தை தரக்குறைவா விமர்சனம் செய்றத பார்க்கும்போது எனக்கும் ரொம்ப கோபம் வருது. நீ ரிவ்யூ பண்ணு, ஆனா இளக்காரமாவோ, தரக்குறைவாகவோ விமர்சனம் பண்ணாத.
அவர் சொன்ன திருச்சிற்றம்பலம் படத்தோட விமர்சனத்தை பார்த்தபோது, அதில் முதல் 10 நிமிஷம் படத்தை பற்றி கழுவி ஊற்றி விட்டு, நடுவுல படம் நல்லா இருக்குன்னு சொல்லுவாரு.
இதெல்லாம் பார்க்குறப்போ, இறங்கி ஏதாவது செய்யலாமாங்குற அளவுக்கு கோபம் வருது. மத்தவங்களுக்கு அப்படி கோபம் வருதான்னு எனக்கு தெரியல. ஆனா உண்மையிலேயே எனக்கு இறங்கி ஏதாவது செய்யலாமான்னு தோணுது என்று கூறியுள்ளார்.
கெளதம் மேனனின் இந்த விமர்சனத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன். கெளதம் மேனனனையும் வெந்து தணிந்தது காடு படத்தையும் தொடர்ந்து கேலி செய்து வருகிறார்.
மேலும், அவரது பெயரில் இருக்கும் மேனன் என்ற சாதிப்பெயரை குறிப்பிட்டு விமர்சித்து வரும் ப்ளூ சட்டை, கெளதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலே பட போஸ்டரை பதிவிட்டு அதில் கெளதம் மேனனின் பெயர் கெளதம் என்று குறிப்பிட்டு இருப்பதை சுட்டிகாட்டி இருக்கிறார்.
மேலும், தமிழ் சினிமாவில் கெளதம் என்ற பெயருடன் நுழைந்துவிட்டு பின்னர் மேல் சாதி பெயரான மேனன் என்ற சாதி பெயரை போட்டுகொண்டு தன்னை உயர்த்திக்கொண்டார். சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் என்று ஜாதியை குறிப்பிட்டு விமர்சித்து இருக்கிறார்.
இன்னொரு கூடுதல் தகவல், இயக்குநர் கௌதம் தனது பெயரை கௌதம் வாசுதேவ் மேனன் என்று 2008ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து பயன்படுத்தி வருகிறார்.
2007ல் அவரது தந்தை மறைவுக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் என்ற பெயரை பயன்படுத்தினார். மின்னலே முதல் பச்சைக்கிளி முத்துச்சரம் வரை அனைத்து படங்களில் முடிவில் கௌதம் என்ற பெயர் இருக்கும். 2008ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம்முதல் தற்போது வரை கௌதம் வாசுதேவ் மேனன் என்பதை பயன்படுத்தி வருகிறார்.