மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎப் வாசன் : யூடியூபர் ஜிபி முத்துவுடன் பைக்கில் பயணம்… வழக்குப்பதிவு செய்த கோவை காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 10:36 am

ஜி.பி.முத்துவுடன் அதிவேக பயணம் யூடியூபர் டி.டி.எப் என்கின்ற வாசன் மீது கோவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : கடந்த 14″ம் தேதி டிடிஎப் வாசன் அவரது இருசக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு எம்.டி.எஸ். பேக்கரி அருகே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது சம்மந்தமாக போத்தனூர் காவல் நிலையத்தில் 279 ஐ.பி.சி, 184 எம்வி ஆக்டில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 400

    0

    0