ரசிகர்களே அடுத்த கோவில் கட்ட தயாரா? சினிமாவில் கால் பதிக்கும் குஷ்புவின் மூத்த மகள்.. அட இவ்ளோ ஸ்லிம் ஆ மாறிட்டாங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 12:50 pm

80, 90களில் முண்ணனி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் 1986ம் ஆண்டு வெளியான வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் குஷ்பூ. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடத்துள்ளார்.

இவருக்கு இவரது ரசிகர்கள் கோவில் வரை கட்டியுள்ளனர். சென்னையில் இவர் பெயரில் கிடைக்கும் குஷ்பூ இட்லி மிகப் பிரபலம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் 2000ம் ஆண்டு பிரபல இயக்குனநர் சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திதா, அனந்திதா என்ற இரு மகள்கள் உண்டு.

இவர்கள் இருவரும் குஷ்பூவைப் போலவே உடல் தோற்றத்தில் இருந்ததால் கடுமையாக உருவக்கேலி செய்யப்பட்டனர். அவ்வாறு கிண்டலடிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தார் குஷ்பூ.

தற்போது இவர்கள் இருவரும் உடல் எடையை குறைத்து வேற லெவலில் மாறியுள்ளனர். மகள்கள் உடல் எடையை குறைத்ததை பார்த்த குஷ்பூவும் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார்.

குஷ்பூவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இது குஷ்பூதானா என்று கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார். இந்த நிலையில் குஷ்பூவின் மகள் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அவரின் மூத்த மகளான அவந்திகா லண்டனில் உள்ள நடிப்பு பள்ளியில் படித்து வருகிறார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…