எதிர்கருத்து சொன்னாலே கைது செய்வதா..? இந்த மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது… பாஜகவினர் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
21 September 2022, 8:55 pm

கோவை : தவறு செய்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், தட்டிக் கேட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவரை கைது செய்வதா? என்று பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கோவையில் திமுக எம்பி ஆ.ராசாவைக் கண்டித்து போராட்டம் நடத்திய பா.ஜ.க வினர் 200 க்கும் மேற்பட்டோரை சிறையில் அடைக்க உள்ளதால், தற்போது சின்னியம்பாளையம், பிருந்தாவன் மஹாலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ளவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், இந்துக்களை இழிவாக பேசியது, இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆ.ராசா எம்.பி.யாக உள்ள, நீலகிரி மக்களவைத் தொகுதியில், ‘இந்து முன்னணி’ அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், தங்களது இந்து விரோத முகம் அம்பலப்பட்டு போனதை தாங்கிக் கொள்ள முடியாத விரக்தியில், கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அவர்களை தி.மு.க. அரசு கைது செய்ததுள்ளது.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய, ஆ.ராசாவை கைது செய்யாமல், பெயரளவுக்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், அதற்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க. மாவட்டத் தலைவரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத, பாசிச அரசு என்பதை இதன் மூலம் மீண்டும் ஒருமுறை தி.மு க. நிரூபித்திருக்கிறது.

தி.மு.க.வினர் வாயை திறந்தாலே, ஜனநாயகம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் பற்றி வகுப்பெடுப்பார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எதிர் கருத்து சொன்னாலே கைது செய்து, அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க.வின் இந்த அதிகார மிரட்டலுக்கு பா.ஜ.க. ஒருபோதும் அஞ்சாது. கைது செய்யப்பட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பாசிச தி.மு.க. அரசை எதிர்த்து பா.ஜ.க. தொடர்ந்து போராடும், எனக் கூறினர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?