கையில் மது பாட்டில்… காரில் விடியல் பாடல்… திமுக கவுன்சிலர் போட்ட கும்மாளம்.. வைரலாகும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan24 September 2022, 5:07 pm
திமுக கவுன்சிலர் ஒருவர் கையில் மதுபாட்டிலுடன், விடியல் பாடலுக்கு கும்மாளம் போட்டுக் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல்முறையாக திமுக ஆட்சியமைத்துள்ளது. பொறுப்பேற்ற அரசு மீது எந்த விமர்சனமும் செய்ய முடியாது என்பதால், ஓராண்டுகள் பெரும் விமர்சனம் இல்லாமல் கடந்தது திமுக அரசு. தற்போது, ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.
குறிப்பாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி, திக்காடி வரும் நிலையில், தற்போது, கடலூர் திமுக கவுன்சிலர் குமரகுருவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விமர்சனத்தையும், கிண்டலையும் பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணா கிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்கவரப்பட்டு திமுக ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் குமரகுரு, வழக்கறிஞராகவும் பணி செய்து வருகிறார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் கார் ஒன்றில் பயணம் செய்த குமரகுரு, கையில் மது பாட்டிலுடன் உற்சாகமாக பாடிக் கொண்டே சென்றுள்ளார்.
அவரது காரில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த படத்தின் இருபுறமும் மதுபாட்டிலை வைத்து சிரித்துக் கொண்டே, திமுகவின் பிரச்சார பாடலான “ஸ்டாலின் தான் வராரு… விடியல் தரப் போராரு…” ஒலிக்க, அதனை கூடவே சேர்ந்து கோரஸ் பாட்டு பாடுகிறார்.
அப்போது தான் மதுபாட்டில்களை ஸ்டாலின் படத்திற்கு அருகில் கொண்டு சென்று காண்பித்து குஷியாகிறார். இந்த விஷயங்களை காரின் பின்புறம் அமர்ந்துள்ள ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி விட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ வைரலாகிய நிலையில், திமுகவினர் ஆத்திரமடைந்துள்ளனர். அதேவேளையில், இதுதான் திமுகவின் உண்மையான விடியல் என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.