‘PS-1 ஒரு தெலுங்கு படம்’ – சுஹாசினி பேச்சால் வெடித்த சர்ச்சை: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
26 September 2022, 2:38 pm

பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் இப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முன்பதிவின் கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து முதல்நாளில் இப்படம் பெரிய வசூலை குவிக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே நடிகை சுஹாசினி பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. ஆம், பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அப்போது மணிரத்னத்திற்கு பதிலாக அவரின் மனைவி சுஹாசினி கலந்து கொண்டுள்ளார். அவர் பேசிய விஷயம் தான் ரசிகர்களின் ட்ரோல்ஸ்-க்கு உள்ளாகி இருக்கிறது.

அதன்படி அவர் “பொன்னியின் செல்வன் உங்க திரைப்படம், நீங்கள் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும். இது உண்மையான தமிழ் கதை, ஆனால் படத்தின் ஷூட்டிங் ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நடந்தது.

தமிழ்நாட்டில் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடந்தது, மற்றபடி படமுழுக்க ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தான் நடந்தது. எனவே இது உங்க திரைப்படம்” என ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் பலரும் பலவிதமாக சுஹாசினி-ன் பேச்சை ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu