சொந்தமாக கடை திறந்த உடுமலைப்பேட்டை கௌசல்யா: சிறப்பு விருந்தினராக வந்த தனுஷ் பட நடிகை சொன்ன அந்த ஒரு வார்த்தை..!
Author: Vignesh26 September 2022, 3:32 pm
ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட கவுசல்யாவின் வாழ்க்கையை படமாக்கினால் துணை நிற்பேன் என்று நடிகை பார்வதி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஷங்கருக்கும், கௌசல்யாவிற்கும் காதல் ஏற்பட்டு இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சார்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் குடும்பத்தில் அவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.
பின் இருவருமே 2015 ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கௌசல்யாவின் பெற்றோர்கள் கூலிப்படை மூலம் இரண்டு பேரையுமே கொல்லம் திட்டமிட்டு இருந்தனர். அதன் பின் 2016 ஆம் ஆண்டு உடுமலை பஸ் நிலையம் அருகில் பட்ட பகலில் சங்கரையும், கௌசல்யாவையும் கூலிப்படையினர் வெட்டி சாய்த்தனர். இதில் ஷங்கர் உயிர் இழந்தார். கௌசல்யா படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.
கௌசல்யா ஆணவ படுகொலை:
இந்த ஆணவ படுகொலை தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது கோவையை அடுத்த வெள்ளலூரில் உடுமலைப்பேட்டையில் ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட கவுசல்யா அவர்கள் அழகு நிலையம் ஒன்றை திறந்து வைத்திருக்கிறார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு நடிகை பார்வதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இந்த அழகு நிலையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகை பார்வதி பதில் அளித்து இருந்தார்.
பார்வதி மேனன் அளித்த பேட்டி:
அதில் அவர் கௌசல்யா குறித்து சொன்னது, கௌசல்யா போன்ற பெண்களுக்காக நான் இங்கே வந்திருக்கிறேன். காதலிப்பதற்கும், அவர்கள் வாழ்க்கை வாழ்வதற்கும் பெண்களுக்கும் முழு உரிமை உண்டு. ஆனால், பெண்களுடைய உரிமையை சிலர் திருட பார்க்கிறார்கள். கௌசல்யா மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக திகழ்கிறார். அவருடைய வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தால் அதற்கு நான் துணை நிற்பேன்.
கௌசல்யா குறித்து பார்வதி மேனன் சொன்னது:
ஆணவ படுகொலைக்கு எதிராக வெளிவரும் படங்கள் வரவேற்கப்பட வேண்டும். கௌசல்யாவுடைய வாழ்க்கை, பயணம், போராட்டங்கள் போன்றவற்றை செய்திகள் படிப்பதன் மூலமாக தான் நான் அறிந்து கொண்டேன். வழக்கமாக இது போன்ற கடை திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு நான் செல்வதில்லை. ஆனால், இங்கு ஒரு புது வாழ்க்கையை துவங்குகிறார்கள். அதனை கொண்டாட வந்திருக்கிறேன். கௌசல்யா வாழ்க்கை படமாக்கினால் நான் நடிப்பேனா என தெரியவில்லை? அப்படி ஒரு படம் எடுத்தால் என்னால் முடிந்த சப்போர்ட் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.
பார்வதி மேனன் திரைப்பயணம்:
தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக பார்வதி மேனன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆரம்பத்தில் இவர் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து பின் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பூ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார். பின் இவர் சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், மரியான் போன்ற பல படங்களில் நடித்தார். அதற்குப்பின் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.