இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்… சர்ப்ரைஸ் ஆன குடும்பத்தினருடன் க்ரூப் போட்டோ..!

Author: Vignesh
27 September 2022, 11:38 am

முதல்வர் ஸ்டாலின் திடீரென இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்கு சென்ற போட்டோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார். இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெய்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

நானே வருவேன்

இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் அவரது தம்பியான நடிகர் தனுஷ் நடித்துள்ளார். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து தனது தம்பியை வைத்து இயக்கிருக்கிறார் செல்வராகவன். இந்தப் படம் நாளை மறு நாள் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

நடிப்பிலும் கவனம்

இயக்கம் மட்டுமின்றி தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறார் செல்வராகவன். சாணிக்காயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ள நானே வருவேன் படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் திடீரென இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார்.

முதல்வர் விசிட்

இதனால் செல்வராகவனின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினுடன் தங்களின் குடும்பத்தினர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள செல்வராகவன், தமிழக முதல்வர் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலின் என்ன காரணத்திற்காக செல்வராகவன் வீட்டிற்கு சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை. முதல்வர் ஸ்டாலின் செல்வராகவன் வீட்டிற்கு சென்ற போட்டோ இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. நானே வருவேன் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் முதல்வரின் திடீர் விசிட் படக்குழுவினருக்கு உற்சாகமளித்துள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 524

    0

    0