திருப்பதியில் புரட்டி போட்ட புரட்டாசி பிரம்மோற்சவம் : வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டமே இல்லாததால் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 1:07 pm

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மோற்சவ துவக்க நாள் அன்று காத்து வாங்குகிறது திருப்பதி மலை.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடி ஏற்றத்துடன் இன்று துவங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ சமயத்தில் ஏழுமலையானை வழிபடவும், சாமி ஊர்வலம் நடைபெறும் போது உற்சவ மூர்த்தியை வழிபடவும் குறைந்த அளவு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி மலையில் கூடுவது வழக்கம்.

இரண்டு ஆண்டுகளாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் கோவில் மாட வீதிகளில் நடைபெறவில்லை. எனவே பிரம்மோற்சவ தரிசன வாய்ப்பு பக்தர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்தது.

எனவே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பிரம்மோற்சவத்தை கண்டு தரிசிக்க வழக்கத்தை விட அதிக அளவிலான பக்தர்கள் திருப்பதி மலையில் கூடுவார்கள் என்று எதிர்பார்த்து தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்திருந்தது.

ஆனால் நேற்று முதல் தற்போது வரை பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து திருப்பதி மலை இதுவரை இல்லாத வகையில் காத்து வாங்கி கொண்டுள்ளது.

இதனால் குறைந்தபட்சம் ஒரே மணி நேரத்தில் பக்தர்கள் இலவச தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபடுகின்றனர். வந்திருக்கும் பக்தர்கள் இதனால் மீண்டும், மீண்டும் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை ஆனந்தமாக வழிபட்டு ஊர் திரும்புகின்றனர். ஆனாலும் பக்தர்கள் சுவாமிக்கு அருகில் சென்று தரிசிக்க அனுமதி கிடைக்கவில்லை.

தங்கும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பிரமோட்சவத்தை காரணமாக காண்பித்து கெடுபிடியை தேவஸ்தானம் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 491

    0

    0