வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் ரிலீஸ் & ஷூட்டிங் குறித்து தயாரிப்பாளர் என்ன சொன்னார் தெரியுமா..?

Author: Vignesh
28 September 2022, 12:15 pm

இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, ‘பாவக்கதைகள்’ படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் “சி சு செல்லப்பா” எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய “அசுரன்” மற்றும் “விசாரணை” படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் “விடுதலை” படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் “வாடிவாசல்” படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன் வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த வெள்ளோட்ட படப்பிடிப்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பயிற்சி எடுக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யா பிறந்த நாளை ஒட்டி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, வாடிவாசல் படத்தின் ரிலீஸ் மற்றும் படப்பிடிப்பு குறித்து பதில் அளித்துள்ளார்.

வாடிவாசல் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படப்பிடிப்பு தேதி குறித்த தகவல்களை இயக்குனர் வெற்றிமாறன் தான் முடிவு செய்வார் என்றும் வெற்றிமாறன் ஒரு தெய்வீக இயக்குனர் என்றும் தாணு கூறியுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 445

    0

    0