வேணாம் முடியவே, முடியாது-னு சொல்லியும் விடல.. வேறுவழியில்லாமல் கட்டாயப்படுத்திய ரசிகரிடம் சிக்கிய நடிகை ராஷ்மிகா.!!

Author: Vignesh
28 September 2022, 2:10 pm

கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட். தற்போது விஜயுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை, ஹைதராபாத், மும்பை என்று பல படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பொது இடத்தில் ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு ரசிகர் தன் நெஞ்சு பகுதியில் இருக்கும் டிசர்ட்டில் ஆட்டோகிராப் போடவேண்டும் என்று கட்டாயபடுத்தியிருக்கிறார். வேறுவழியில்லாமல் ரசிகரின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!