ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல… மொத்தம் 36… திட்டங்கள் அல்ல வெறும் குழுக்களை அமைக்கும் அரசாகவே திகழும் திமுக : இபிஎஸ் கடும் விமர்சனம்!!
Author: Babu Lakshmanan29 September 2022, 2:00 pm
டவிலைவாசி,சொத்துவரி, வீட்டுவரி, மின்கட்டண உயர்வை தருவதுதான் திமுகவின் திராவிடமாடல் ஆட்சி என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, வீட்டுவரி, சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டததில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் :- தமிழகத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முடக்கி வைத்துள்ளதாகாவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருங்கால சந்ததிகளான மாணவர்கள் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும் பேசினார்.
12 சதவிகிதமாக இருந்த மின்கட்டனம் 52 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், சொத்துவரி மற்றும் வீட்டுவரி 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதை அதிமுக வன்மையாக கண்டிப்பதாகவும், பட்டாசு தொழிலை பாதுகாக்க அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கூறினார்.
மேலும், திமுக அரசு எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தாமல், திட்டங்களை அறிவிப்பதுபோல் அறிவித்துவிட்டு குழுக்களை மட்டும் நியமித்துள்ளதாகவும், இதுவரை 36 குழுக்களை நியமித்துள்ள செயல்படாத அரசாக திமுக அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.