‘வெந்து தணிந்தது காடு PS-க்கு வணக்கத்த போடு’ :அதுக்குன்னு.. படம் பார்க்க இப்படியா..? Cool Suresh Entry-ஆல் வாயடைத்து போன திரையரங்கம்..!

Author: Vignesh
30 September 2022, 10:51 am

‘வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்த போடு’ என்கிற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியபடி தியேட்டருக்குள் எண்ட்ரி கொடுத்தார் கூல் சுரேஷ்.

நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை புரமோட் செய்ததில் நடிகர் கூல் சுரேஷுக்கும் முக்கிய பங்கு உண்டு. அவர் கடந்த சில மாதங்களாகவே வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி பேசி வந்ததால் அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவருக்கு ஐபோன் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார்.

இந்நிலையில், இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி இருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை காண இன்று அதிகாலை தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷின் எண்ட்ரியை பார்த்து பலரும் வியந்து போயினர். ஏனெனில் அவர் மாஸாக குதிரையில் எண்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமின்றி கையில் ‘வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்த போடு’ என்கிற வாசகம் அடங்கிய பேனரையும் கொண்டு வந்தார்.

அவர் வந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள சியான் விக்ரம் பயன்படுத்திய குதிரை என்றும், அதனை கடன் வாங்கி வாடகைக்கு எடுத்து வந்திருப்பதாகவும் கூல் சுரேஷ் தெரிவித்தார். அவர் குதிரையில் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. வழக்கமாக ரசிகர்கள் தான் அதிகாலை காட்சிக்கு அதிகளவில் வருவார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை காண பேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வந்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!