பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ‘அஜித்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் வாரிசு நடிகை..!

Author: Vignesh
30 September 2022, 4:30 pm

அடுத்தடுத்து பிரம்மாண்ட பட வாய்ப்புகளை கைப்பற்றி வரும் நடிகை அதிதி ஷங்கர், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், விருமன் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். முத்தையா இயக்கிய இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையடுத்து இவருக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் மாவீரன் திரைப்படம். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அடுத்தடுத்து பிரம்மாண்ட பட வாய்ப்புகளை கைப்பற்றி வரும் நடிகை அதிதி ஷங்கர், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம் அதிதி.

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் படம் இயக்காமல் இருந்து வந்த விஷ்ணுவர்தன், இந்தியில் ஷேர்ஷா என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததோடு விருதுகளை வென்று குவிந்தது. தற்போது அவர் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ள படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…