திருப்பதியில் ஒரே நேரத்தில் குவிந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் : கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு… திணறிய போலீசார்!!
Author: Udayachandran RadhaKrishnan1 October 2022, 6:40 pm
திருப்பதி மலையில் இன்று இரவு ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெற உள்ளது. கருட வாகன சேவையை கண்டு வழிபட சுமார் 3 லட்சம் பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்துள்ளனர்.
இரவு 7 மணிக்கு கருட வாகன சேவை துவங்க உள்ளது. ஆனால் இப்போது முதலே மாட வீதிகளில் பக்தர்கள் நிறைந்துள்ளனர். இந்த நிலையில் ஊழியர்களின் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கருட வாகன சேவையை தரிசிக்க சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டன.
இதற்காக பாஸ்களை வாங்கிய பக்தர்கள் வாகன மண்டபத்தை அடைய தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டது. பாஸ்களை வாங்கி வந்த பக்தர்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த வரிசை நுழைவு வாயிலில் சற்று நேரம் திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் அங்கு ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஆகியவை ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்தி அனுப்பி வைக்க போலீசார் பெரும்பாடுபட்டனர்.