மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு திமுக ஆட்சி நடந்து வருகிறது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 1:47 pm

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும் சசிகலாவுடன் சேர மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை கிண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு திமுக ஆட்சி உள்ளது.
திமுக அரசு குழப்பத்தின் உட்சத்தில் இருக்கிறது. அமைச்சர்களுக்கு தெளிவு இல்லை. ஓபிஎஸ் தரப்பு தொண்டர்களையும் மக்களையும் குழப்பும் வகையில் செயல்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் தரப்பினர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரித்து கூறி வருகின்றனர். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும் சசிகலாவுடன் சேர மாட்டார்கள் என்று கூறினார்.

  • Manikandan interview highlights ‘தொலைச்சுப்புடுவேன்’ உன்னை…மணிகண்டனை மிரட்டிய பிரபல நடிகர்…எதற்குனு தெரியுமா..!