‘திருத்த முடியாது..’ டுவிட்டர் பதிவில் பிரபல நடிகர்களை வெளுத்து வாங்கிய சாந்தனு..! அப்போ இது தான் காரணமா..?

Author: Vignesh
3 October 2022, 10:00 am

நீக்கப்பட்ட இயக்குநர் பாக்யராஜ்:

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாக்யராஜ். இவர் கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் போட்டியில் போட்டியிட்டார்.

இப்போட்டியில், நடிகர் நாசர் வெற்றிபெற்றார். இப்போடடியில் இயக்குநர் பாக்யராஜ் தோல்வி அடைந்தார். இதனிடையே நடிகர் சங்க நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் இயக்குநர் பாக்யராஜ் செயல்பட்டதாக புகாரின் அடிப்படையில் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் உதயாவும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகன் சாந்தனு டுவிட்:-

இதனால், கோபமடைந்த நடிகரும், இயக்குநருமான பாக்யராஜின் மகன் சாந்தனு தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பாக்குறீங்க … திருத்த முடியாது’ என்று பதிவிட்டுள்ளார். இயக்குநர் பாக்யராஜை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கிய நாசர், கார்த்தி, விஷால் ஆகியோர் மீதுள்ள கோபத்தில் தான் அவர் இப்படி பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • lal salaam movie released in ott soon ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு? ஓடிடிக்கு தயாரானது லால் சலாம்!