“சார்.. எக்ஸாம் பீஸ் கட்ட பணம் இல்ல.. உதவி பண்ணுவீங்களா..?” – ட்விட்டரில் உதவி கேட்ட கல்லூரி மாணவிக்கு உடனே பணம் அனுப்பிய நடிகர்..!

Author: Vignesh
3 October 2022, 11:00 am

இசையமைப்பாளர் ஜி.பி. பிரகாஷிடம் ஒரு மாணவி, தன்னுடைய கல்லூரி தேர்வுக்கு கட்டணம் இல்லாமல் தவிப்பதாக கூறிய நிலையில், உடனே உதவி செய்துள்ளார். இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்… ஒரு நடிகர் என்பதை தாண்டி பல்வேறு சமூக பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். இயற்கை பேரிடர் காலங்களில் நேரடியாக மக்களுக்கு காலத்தில் இறங்கி பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போன்ற போராட்டங்களிலும் கலந்து கொண்டு, தமிழர்களின் கலாச்சார விளையாட்டுகளுக்கு குரல் கொடுத்தவர்களின் இவரும் ஒருவர்.

நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அறியப்பட்ட ஜி.வி.பிரகாஷ் தன்னிடம் உதவி என வருபவர்களுக்கும், உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் கும்பகோணத்தை சேர்ந்த BCA படிக்கும் கல்லூரி மாணவி என்றும், தேர்வு நெருங்கி விட்டதாகவும்… அதற்கான கட்டணம் தன்னிடம் இல்லை என ட்விட்டர் பக்கத்தில் ஜி.வி.பிரகாஷிடம் உதவி கோரிய நிலையில், அவர் உடனடியாக GPay மூலம் அவருக்கு தேவையான பணத்தை கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து அந்த மாணவியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி தெரிவித்து, தேர்வுக்கு தனக்கு வாழ்த்தும் படி கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியே வர, ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 427

    0

    0