குமுதா ஹாப்பி அண்ணாச்சி..! புது வீடு கட்டி பால் காய்ச்சிய நந்திதா ஸ்வேதா வீட்டில் பிக்பாஸ் பிரபலம்..! வைரல் போட்டோஸ்..!

Author: Vignesh
4 October 2022, 2:00 pm

நடிகை நந்திதா ஸ்வேதா பெங்களுரில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி முடித்துள்ளார். பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் அனைவருக்கும் பிடித்த நடிகையாக மாறினார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை நந்திதா. நந்திதா ஸ்வேதா இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். அடுத்ததே விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பல படங்களில் நடித்துள்ளார் இதையடுத்து, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, விஷ்ணு விஷாலுடன் முண்டாசுபட்டி, உப்புக்கருவாடு உள்ளிட்ட படங்களிலும், தளபதியின் புலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

புலி படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் அளவுக்கு இருந்தது. ஐபிசி 376 வளைந்து நெளிந்து வரும் கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்த நந்திதா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சரியாக ஓடவில்லை.

இதையடுத்து, எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருந்தார். பிரம்மாண்ட வீடு இந்நிலையில் நடிகை நந்திதா ஸ்வேதா பெங்களூரில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றது. இந்த புதுமனை புகுவிழாவில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துள்ளார்.

கிரகப்பிரவேச போட்டோஸ் சினிமா பின்னணி பாடகர் & கன்னட பிக்பாஸ் பிரபலம் ஶ்ரீ ராமச்சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கிரகப்பிரவேச புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஃபேஷன் டிசைனர் ரேஷ்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 551

    0

    0