டிஜிபி-யை கொடூரமாக கொலை செய்த வீட்டு வேலைக்காரர் ; பதவி உயர்வு பெற்ற சில நாட்களிலேயே நேர்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 2:24 pm

பதவி உயர்வு பெற்ற டிஜிபியை கொலை செய்த வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு – காஷ்மீருக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார்.

இந்த நிலையில், சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1992ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டிஜிபி லோஹியா, உதய்வாலா என்னும் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் சிறைத்துறை டிஜிபியாக பதவி உயர்வுபெற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

டிஜிபியை கொலை செய்த வழக்கில் குற்றவாளி யார் என தேடப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது(23) இன்று கைது செய்யப்பட்டார்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!