மணி அடித்து ஆரத்தி காட்டும் ரோபோ… VIT-யில் கொண்டாடப்பட்ட நவீன ஆயுதப்பூஜை… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 3:00 pm

வேலூர் ; காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் புதுமையான முறையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டு வரும் விஐடி தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு, விஐடி பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பில் உருவான நவின ரோபோ மூலம் சரஸ்வதி படத்திற்கு ஆரத்தி எடுத்து மணி அடித்து பூஜை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ரோபோவை விஐடி பல்கலைக்கழக ரோபோடிக் பிரிவை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய நிலையில், ஆயுத பூஜை செய்யும் வீடியோவை மாணவர்களே எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…