மின் கம்பத்தில் தொங்கியபடி சடலம் : பழுது பார்க்க ஏறிய மின்வாரிய ஒப்பந்த ஊழியரான 20 வயது இளைஞர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 6:10 pm

கண்டாச்சிபுரம் அருகே மின்வாரிய ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் யுவராஜ் (வயது 20).

வீரபாண்டியில் உள்ள அம்பேத்கர் தெரு பகுதியில் மின் வயர்களை சரி செய்வதற்காக கம்பத்தில் ஏறிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

20 வயதாகும் மின்வாரிய ஒப்பந்த பணியாளரான இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!