மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 108 வீணை இசை வழிபாடு.. கோலாகலமாக கொண்டாடப்பட்ட நவராத்திரி.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!!

Author: Babu Lakshmanan
5 October 2022, 9:44 pm

மதுரை :விஜயதசமியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 108 வீணை இசை வழிபாடு நடத்தப்பட்டது.

உலக பிரசித்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 26ஆம் தேதி துவங்கிய நவராத்திரி விழா விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவிலில் பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

ஒவ்வொரு நாளும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் நவராத்திரி விழாவின் 9-ஆம் நாள் விழாவான விஜயதசமியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களின் கல்வி மேம்பாடு வேண்டி கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.

இந்த வீணை இசை வழிபாட்டு நிகழ்ச்சியில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் இருந்து மாணவிகள், பேராசிரியர்கள் என ஏராளமானவர்கள் வீணை வழிபாட்டில் பங்கேற்பு செய்தனர்.

வீணை வழிபாட்டின் போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடப்பட்டன. விநாயகர் பாடல் உட்பட 22 பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கபட்டன. வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், இசை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ