3000 – கோடிக்கு சொந்தக்காரரான சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?.. அதிர்ந்து போன திரையுலகம்..!

Author: Vignesh
6 October 2022, 3:15 pm

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், 60 ஆண்டுக்களாக திரையுலகில் கொடிக்கட்டி பறந்த அமிதாப் பச்சன் இப்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவது மட்டுமின்றி சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார் அமிதாப் பச்சன்.

இதன்மூலம் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும் இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ. 3000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது.

மூத்த மகள்

இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு இரண்டு குழந்தைகள், மூத்த மகள் ஸ்வேதா பச்சன், மகன் பிரபல நடிகர் அபிஷேக் பச்சன். மூத்த மகளான ஸ்வேதா பச்சன் தொழிலதிபர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே பாட்காஸ்ட் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் தங்களின் செலவுக்கு கூட பணமில்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற நிலை என் குழந்தைக்கு வரக்கூடாது என அவர் தெரிவித்து இருக்கிறார்.

அப்பா கோடீஸ்வரராக இருக்கலாம் ஆனால் நான் இன்னும் நிதிச் சிக்கில் தான் இருக்கிறேன். பண பிரச்சனையில் இருந்து நான் எப்போது விடுபடப்போகிறேன் என தெரியவில்லை” என பேட்டியளித்து இருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் மகள் இப்படி பேசியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!