தலைமுடி ரொம்ப பிசுபிசுன்னு இருக்கும் போது இத பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
6 October 2022, 4:07 pm

தலைமுடி எப்போதும் ஃபிரஷா இருந்தா தான் முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பிசுபிசுப்பான, எண்ணெய் வழியும் தலைமுடி இருந்தா முகமும் டல்லாகி விடும். இதனால நம்ம ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை தலை குளிப்பது வழக்கம். இருப்பினும், தலை குளித்த பின்னும் உங்கள் தலைமுடி பிசுபிசுன்னு இருந்தால், இதுல ஏதோ தப்பு இருக்கு. அதற்கான அனைத்து காரணங்களும் அதனை எப்படி தவிர்ப்பது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

தலைமுடி பிசுபிசுப்பாக இருப்பதற்கான காரணங்கள்:-
*தவறான முடி தயாரிப்பு

*ஆரோக்கியமற்ற உணவு

*எண்ணெய் முடி

*மாசுபாடு

உங்கள் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்காமல் அல்லது உங்கள் உச்சந்தலையில் எரிச்சல் ஏற்படாமல் பிசுபிசுன்னு இருக்கும் தலைமுடியை எவ்வாறு கையாள்வது என்பது?
அதிகப்படியான கண்டிஷனிங்கை தவிர்க்கவும்
உங்கள் தலைமுடியைக் கழுவுவதையும் கண்டிஷனரை அடிக்கடி பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். இது சரியான நடைமுறையல்ல.

தேயிலை மர எண்ணெய் பயன்படுத்தவும்
தேயிலை மர எண்ணெய் அடிப்படையிலான ஷாம்பு முடியை உலர்த்தும் மற்றும் எண்ணெயை ஊறவைக்கும் திறன் கொண்டது. உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்ய நீங்கள் நேரடியாக தேயிலை மர எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது பொடுகைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும், அரிப்புக்கு சிகிச்சையளிக்கவும், உச்சந்தலை மற்றும் முடியை சுத்தம் செய்யவும் உதவும்.

முடி ஸ்டைலிங் பொருட்களை தவிர்க்கவும்
முடியை நேராக்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். மெழுகு மற்றும் கண்டிஷனர்கள் போன்ற ஸ்டைலிங் தயாரிப்புகள் பெரும்பாலும் உங்கள் தலைமுடியை அதிக எண்ணெயாக மாற்றும்.

முடியை சரியாக ஈரப்பதமாக்குங்கள்
உங்கள் தலைமுடியை தவறாமல் ஈரப்படுத்தவும். மேலும் முடி மட்டுமின்றி, உச்சந்தலை மற்றும் வேர்களை ஈரப்பதமாக்குங்கள். தலைமுடி நன்கு நீரேற்றமாக இருக்கும் போது, ​​அது ஒட்டுமொத்தமாக வலுவாகவும், பளபளப்பான இழைகளாகவும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வீட்டில் ஸ்க்ரப் பயன்படுத்தவும்
ஒரு ஸ்பூன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் இரண்டு ஸ்பூன் முல்தானி மிட்டியை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.
இதனோடு சிறிது புதிய கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும்.
மேலும் 1/2 ஸ்பூன் ரோஸ் வாட்டரைச் சேர்க்கவும்.
தலைமுடியை இரண்டு பாகங்களாகப் பிரித்து நாம் தயார் செய்த பேஸ்டை உச்சந்தலையில் தடவி, 20 நிமிடங்கள் விட்ட பின்னர் கழுவவும்.

  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 522

    0

    0