ராஜராஜ சோழன் இந்து கிடையாது… அவர் சைவ மன்னர்தான்… அடித்துச் சொல்லும் TKS இளங்கோவன்!!

Author: Babu Lakshmanan
6 October 2022, 4:14 pm

ராஜ ராஜ சோழன் இந்து மதத்தைச் சேர்ந்தவர் கிடையாது என்று திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

வரும் 9-ம் தேதி திமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- மாமன்னர் ராஜ ராஜ சோழன் இந்துவா..? இல்லையா..? என விவாதம் நடைபெற்று வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் இந்து கிடையாது. அவர் ஒரு சைவ மன்னர். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறும் போது எங்கெங்கெல்லாம் கலவரம் நடைபெறுகிறது என பத்திரிகையாளர்கள் படம் எடுத்து செய்தி வெளியிடுங்கள், எனக் கூறினார்.

அப்படியானால் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியில் கலவரம் நடக்கும் என்று சொல்கிறீர்களா …? என்ற கேள்விக்கு “கலவரம் நடைபெறவில்லை என்றால் அது ஆர்எஸ்எஸ் பேரணியே கிடையாது” என பதிலளித்தார்.

நடைபெற உள்ள பொதுக்குழுவில் கனிமொழிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா..? என்ற கேள்விக்கு கனிமொழிக்கு புதிய பொறுப்பு வழங்குவது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முடிவு செய்வார் என தெரிவித்தார்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?