இதென்னடா வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சோகம் : 2வது நாளாக மீண்டும் விபத்து… மீண்டும் கால்நடைகள் மோதியதால் விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 8:17 pm

மஹாராஷ்ராவின் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

குஜராத்திலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வாத்வா ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு மணிநகர் நோக்கி புறப்பட்ட போது தண்டவாளத்தின் குறுக்கே எருமை மாடுகள் கூட்டமாக வந்ததால் எருமைகள் மீது மோதியதில் ரயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் எருமை மாடுகள் சில பலியானதாக கூறப்படுகிறது.

சேதமடைந்த ரயிலின் புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் சேதமடைந்த ரயிலில் முன்பகுதி சரி செய்யப்பட்டது. இன்று வழக்கம் போல் ரயில் சேவை துவங்கியது.

இதனை மேற்கு ரயில் நிர்வாகம் புகைபடங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணமாக எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சேதமடைந்து சரி செய்யப்பட்ட ரயில் இன்று மீண்டும் விபத்துக்குள்ளானது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம்தான் துவங்கப்பட்ட இந்த ரயில், நேற்றும் விபத்துக்குள்ளாகி தொடர்ந்து இன்றும் விபத்துக்குள்ளானது விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.

  • Ajithkumar's Vidaamuyarchi Twitter review Vidaamuyarchi Twitter review: சாதித்தாரா அஜித்குமார்? விடாமுயற்சி விமர்சனம்!