“மானம் போச்சு மரியாதை போச்சு…” போட்டோவை லீக் செய்த இயக்குனர் செயலால் புலம்பும் பிரபல நடிகை..!
Author: Vignesh8 October 2022, 7:00 pm
மஹிமா நம்பியார் 15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். அதில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்தார். இயக்குனர் சாமியின் சிந்து சமவெளி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விளம்பரங்கள் வெளிவந்தன. பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காகப் படத்திலிருந்து விலகினார்.
2012 ம் ஆண்டு சாட்டை திரைப்படத்தில் அறிவழகி என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்தார். சாட்டை திரைப்படத்திற்குப் பிறகு பள்ளி படிப்பை ஒரு ஆண்டு படித்து நிறைவு செய்தார்.
பிறகு நான்கு திரைப்படங்களில் நடித்தார். என்னமோ நடக்குது படத்தில் மது என்ற செவிலியராக நடித்துள்ளார். மொசக்குட்டி, இயக்குனர் ஜீவன் திரைப்படத்திலும், புறவி 150சிசி, என்ற வேங்கடேஸ் இயக்கும் திரைப்படத்திலும், மருது இயக்கத்தில் ஆனந்தி படத்திலும் நடித்துள்ளார்.
ஹீரோயினாக நடித்து வரும் வளரும் நடிகையான இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனியின் ஜோடியாக நடித்து வருகிறார் மஹிமா. இந்த படத்தை இயக்குனர் சி.எஸ்.அமுதனின் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
தாய்லாந்தில் ஷூட்டிங் நடத்தி கொண்டிருக்கும் நிலையில், அங்கு நடிகை தூங்கிக்கொண்டிருக்கும் போட்டோவை இயக்குனர் அமுதன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதை பார்த்து அதிர்ச்சி ஆனா மஹிமா “என் ஸ்டைல் போச்சு, மானம் போச்சு, மரியாதை போச்சு, எல்லாமே போச்சு. நான் இந்தியாவுக்கு திரும்பி போக விரும்பவில்லை” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவங்க hardwork பன்றத பாக்கும் போது.
— vijayantony (@vijayantony) October 7, 2022
அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு💪 https://t.co/NY2pVlPWoI