தீபாவளி ரேசில் ‘சர்தார்’ உடன் மோதும் ‘பிரின்ஸ்’… சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ..!

Author: Vignesh
8 October 2022, 9:00 pm

சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நடிகர் சிவகார்திகேயன் திகழ்ந்து வருகிறார். சிவகார்திகேயனின் படங்களும் பெரிய அளவுக்கு வியாபாரம் ஆகிறது.

prince_updatenews360

தற்போது நடிகர் சிவகார்திகேயன் நடித்து இருக்கும் பிரின்ஸ் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், கார்த்தி நடிக்கும் ‘சார்தார்’ திரைப்படமும், சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படமும் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.

இதனிடையே, ‘பிரின்ஸ்’ படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என தற்போது சிவகார்த்திகேயன் அறிவித்து அதற்காக ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

prince_updatenews360

“முதலில் நன்றி, டாக்டர் மற்றும் டான் படங்களுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு பெரியது என்றும், பிரின்ஸ் தான் எனக்கு முதல் தீபாவளி ரிலீஸ் என்றும், அதனால் பயங்கர excited ஆக இருக்கிறேன்என்றும், இது ஒரு fun filled படம் எனவும், அதை தண்டி ஒரு noble thought இருக்கிறது இந்த படத்தில்” என சிவகார்த்திகேயன் வீடியோவில் கூறி இருக்கிறார்.

வீடியோ இதோ..

  • Allu Arjun controversy Pushpa 2 அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!
  • Views: - 446

    0

    0