யாருக்குமே கொடுக்க முடியாது… சிவசேனா கட்சி சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் : மராட்டிய அரசியலில் பரபர…!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2022, 10:04 pm

மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார். பா.ஜ., ஆதரவுடன், மஹாராஷ்டிர முதல்வராகஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார்.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் சின்னமான வில், அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய உரிய சான்றுகளை வழங்கும்படி, உத்தவ் தாக்கரே, அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாநிலத்தில் அந்தேரி கிழக்கு சட்டசபை தொகுதிக்கு நவம்பரில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் யாருக்கு சின்னம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதையடுத்து, தேர்தல் ஆணையம் தற்காலிகமாக வில் அம்பு சின்னத்தை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருதப்பும் வேறு ஏதாவது ஒரு சின்னத்தை தேர்வு செய்து வரும் அக்.10-ம் தேதிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 824

    0

    0