பத்ம ஸ்ரீ விருது பெற்ற பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார் : வில்லுப்பாட்டு மூலம் மக்களிடையே ஆன்மீகத்தை பரப்பியவர்!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 8:37 am

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக இன்று சென்னை கே.கே. நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார்.

கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்

இவர் வில்லுப்பாட்டினை மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் சுப்பையா பிள்ளை போன்றவர்களிடம் கற்றார். 1975ம் ஆண்டு கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார்.

2021ம் வருடம் மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தது. சுப்பு ஆறுமுகத்தின் மறைவு குறித்து பல தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 531

    0

    0