மதுரையில் 2026ல் எய்ம்ஸ்… மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது : மத்திய இணையமைச்சர் பாரதி பவார் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 8:53 am

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த, தர்மபுரி வடக்கு ஒன்றிய பா.ஜ.க, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பங்கேற்றோர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தை செயல்படுத்த, கடந்தாண்டு மட்டும், 58 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தில், மாவட்டத்தில், 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

தமிழகத்துக்கு தேசிய சுகாதார திட்டத்துக்காக, 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சுகாதார துறையில் பல்வேறு திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த, தமிழக அரசுக்கு மத்திய அரசு, 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், அத்திட்டங்களில் பிரதமர் மோடியின் படம், இந்திய அரசின் சின்னங்களை தமிழக அரசு வெளியிடவில்லை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. மத்திய அரசு இதற்கான நிதியை மறு மதிப்பீடு செய்து, 1,977 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இந்த பணிகள், 2026க்குள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை, ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

  • Vijay Antony live concert cancellation ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி…வெளிவந்த அறிக்கையால் பரபரப்பு..!
  • Views: - 779

    0

    0