மதமாக எடுத்துக்கொண்டால் நான் இந்து அல்ல… ஆனால் தர்மத்தின் படி நான் இந்து : இயக்குநர் ராஜமௌலி விளக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan10 October 2022, 11:15 am
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான விருது பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திகளின்படி, அவர் அமெரிக்காவில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.
அதில் இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வில், இயக்குனர் ராஜமௌலி இந்து மதத்திற்கும் இந்து தர்மத்திற்கும் வித்தியாசம் உள்ளது என கூறியுள்ளார். ”தற்போதைய சூழலில், பலர் இந்து – மதம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்து மதத்திற்கு முன், இந்து தர்மம் இருந்தது. இது ஒரு வாழ்க்கை முறை, ஒரு தத்துவம்.
மதமாக எடுத்துக் கொண்டால், நானும் இந்து அல்ல. ஆனால் தர்மமாக பார்த்தால் நான் தீவிர இந்து. படத்தில் நான் சித்தரிப்பது உண்மையில், பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருந்து வரும் ஒரு வாழ்க்கை முறையைத்தான்” என்றார்.
ராஜமௌலியின் சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் படமான ஆர் ஆர் ஆர், இந்து மத சித்தாந்தத்தை நிறையவே கொண்டிருந்தது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில். இது குறித்துப் பேசிய ராஜமெளலி, வாழ்க்கையை எப்ப்டி பார்க்க வேண்டும் என்பதை இந்து தர்மம் போதிக்கிறது.
எனவே நான் இந்து தர்மத்தை பின்பற்றுகிறேன், என்றார். ராஜமெளலியின் இந்த கருத்துக்கு ஒருபக்கம் ஆதரவும், ஒருபக்கம் எதிர்ப்பும் கிளம்பியிருக்கின்றன.