பேருந்து நிழற்குடையிலேயே வைத்து +2 மாணவிக்கு திருமணம்… அதிர வைக்கும் 2k கிட்ஸின் அலப்பறை… வைரலாகும் ஷாக் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 1:20 pm

பேருந்து நிழற்குடையில் அமர வைத்து மாணவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சி வெங்காயதலமேடு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவியும், வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவனும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்த நிலையில், சிதம்பரம் காந்தி சிலை அருகே சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கான மினி பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. பயணிகள் வசதிக்காக அங்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் நண்பர்கள் சூழ்ந்திருக்க, அந்த மாணவிக்கு மஞ்சள் கயிற்றை தாலியாக அந்த மாணவர் கட்டியுள்ளார். அப்போது, முகம் முழுவதும் சிரிப்பு மலர, வெட்கத்தில் முகத்தைப் பொத்திக் கொண்டு அந்த மாணவி அதை ஏற்றுக் கொள்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருவரும் மைனர்களாக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் தீவிர விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

காதல் மோகத்தில், எதிர்காலத்தில் நிகழும் விபரீதங்களை அறியாமல், பெற்றோர்களை மீறி மாணவர்கள் தாலி கட்டிக் கொள்ளும் இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

https://player.vimeo.com/video/758627247?h=b2302bf45e&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 666

    0

    0