பொதுமக்கள் முன்னிலையில் டாட்டா காட்டியவாறு குளத்தில் குதித்த நபர் : வெகு நேரம் போராடிய இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 4:12 pm

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில்,டாடா காட்டியவாறு குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வாலிபரால் பரபரப்பு அவர் யார் என காவல்த்துறையினர் விசாரணை…

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில் துணைமின் நிலைய தலைமை அலுவலகம் அருகே, சாலையோரமுள்ள வீரன்குளம் கண்மாயின் முன்புறமுள்ள பேருந்து நிறுத்தத்தில் சுமார் 10-க்கு மேற்பட்டோர் பேருந்துக்காக நின்றிருந்தபோது அருகே நின்றிருந்த 35-வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று எதிரேயுள்ள குளத்தில் பொதுமக்களுக்கு டாட்டா கட்டியவாறு மளமளவென குளத்தில் இறங்கினார்.

குளத்தின் நடுப்பகுதிக்கு சென்று மாயமாகினார். அவர் குளத்துக்குள் செல்வதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர்கள் உடனடியாக வத்தலக்குண்டு காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

பின்னர், அங்கிருந்த இளைஞர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் குளத்திற்குள் இறங்கி தேடினர். பின் வெகுநேரம் கழித்து அந்த இளைஞர்கள் அவரை பிணமாக தூக்கி வந்தனர்.

அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் டீசர்ட் பாக்கெட் மற்றும் பேண்ட் பாக்கெட்டில் எதுவும் இருக்கிறதா என்று சோதனையிட்டனர்.

சோதனையில் எதுவும் சிக்கவில்லை அங்கிருந்தவர்கள் சில தினங்களாக ப்ளூ டீ சர்ட் அணிந்து இந்த பகுதியில் திரிந்ததாக கூறினர். அங்குள்ள ஒரு டீ கடையில் காலையில் டீ குடித்ததாகவும் கூறினர்.

பின்னர், அந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் அவரது உடலை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்