சர்வாங்காசனம்: பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய யோகாசனம்!!!

Author: Hemalatha Ramkumar
10 October 2022, 4:46 pm

சர்வாங்காசனம் அல்லது தோள்பட்டை நிலை என்ற யோகா போஸில் முழு உடலும் தோள்களில் சமநிலைப் பெறுகிறது. பெயர் குறிப்பிடுவது போல, சர்வாங்காசனம் நம் உடலின் அனைத்து பாகங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்த ஆசனம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் ‘ஆசனங்களின் ராணி’ என்றும் அழைக்கப்படுகிறது.

சர்வாங்காசனத்தின் பலன்கள்:-
*தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளைத் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை சீராக்குகிறது

*கைகள் மற்றும் தோள்களை பலப்படுத்துகிறது மற்றும் முதுகுத்தண்டை நெகிழ்வாக வைக்கிறது

*மூளைக்கு அதிக ரத்தம் ஊட்டுகிறது

*அதிக சிரை இரத்தத்தை இதயத்திற்கு திருப்பி இதய தசைகளை நீட்சி அடையச் செய்டுகிறது

*மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் தருகிறது

பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் சர்வாங்காசனம் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்:-
*கர்ப்பம்
*மாதவிடாய்
*உயர் இரத்த அழுத்தம் *இதயப் பிரச்சனை *கிளௌகோமா
*ஸ்லிப் டிஸ்க் *ஸ்போண்டிலோசிஸ் *கழுத்து வலி
*கடுமையான தைராய்டு

  • srikanth shared about the sad feeling for what he did to mani ratnam மணிரத்னம்கிட்ட நான் அப்படி பண்ணிருக்கவே கூடாது, எல்லாம் என் தப்புதான்- மனம் நொந்துப்போன ஸ்ரீகாந்த்…