ஓடும் ரயிலில் தொடரும் புள்ளிங்கோக்களின் அட்டகாசம்… கத்தியை பிளாட்பாரத்தில் உரசி அராஜகம்… 4 கல்லூரி மாணவர்கள் கைது..!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 6:06 pm

சென்னையில் ஓடும் ரயிலில் பட்டா கத்திகளுடன் பிளாட்பாரத்தில் உரசி அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் சிலர், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பதும், பட்டா கத்திகளை வைத்து சக பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கண்டறிந்து, அறிவுரை கூறி அனுப்பி வைப்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநில கல்லூரி மாணவர்கள், சென்னை புறநகர் மின்சார ரயிலில் கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் கத்திவாக்கம், அத்திப்பட்டு ரயில்நிலையத்தில் இருந்து தொங்கியபடி அட்டகாசம் செய்தனர்.

ரயிலில் பயணம் செய்த ரயில் பயணிகள் மற்றும் இதனை வெளியில் இருந்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள் என அச்சத்தில் உறைந்தவர்கள் இந்த அராஜகத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர்.

இந்த வீடியோக்களின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து சந்தேகத்துக்கிடமான நான்கு கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://player.vimeo.com/video/758705730?h=66f2437eaa&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?