நான் ஒன்னும் சேரியில பிறக்கல… பட்டியலின மக்களை இழிவுபடுத்திய அர்ணவ் ; விரைவில் கைதாகிறாரா..?
Author: Vignesh11 October 2022, 1:15 pm
‘பல்லக்கி’ எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் பெங்களூருவைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனிடையே, புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் அர்ணவ் என்ற பெயரில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருந்தார்.
கேளடி கண்மணி’ சீரியலை தொடர்ந்து நடிகை திவ்யா மற்றும் அர்ணவ் பிரபலமானார்கள். நடிகை திவ்யா மகராசி, செவ்வந்தி சீரியலிலும் நடித்துள்ளார். அர்ணவ் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.
2017 ஆம் ஆண்டு முதல் காதலித்த இவர்கள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்தாண்டு ஜூன் மாதம் திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து முஸ்லீம் முறைபடியும் இந்து முறைபடியும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே, கணவர் அர்ணவ் தன்னை தாக்கியதாக கூறி நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டார். மேலும், திவ்யா அளித்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அர்ணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
நடிகை திவ்யா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அர்ணவ், நான் திவ்யாவை அடிக்கவில்லை அவர் தான் என்னை அடித்தார் என்று, ஆதாரமாக தனது செல்போனில் உள்ள போட்டோக்களை காண்பித்தார்.
பல முறை நடிகை திவ்யா தற்கொலை செய்து கொள்வேன் என கைகளை கத்தியால் கிழித்துக் கொண்டு தன்னை மிரட்டி உள்ளதாகவும், குழந்தை இருப்பது தெரியாது தனது அக்காவின் குழந்தை என்று திவ்யா கூறியதாகவும், திவ்யா விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறியிருந்த நிலையில், காதலித்தது 5 ஆண்டுகளாக சேர்ந்து இருந்தது எல்லாம் உண்மை தான். ஆனால், திருமணத்திற்காக விவாகரத்து பேப்பரை கேட்டபோது தான் இந்த ஜனவரியில் தான் விவாகரத்தாகி உள்ளதே தெரிந்தது.
மேலும் திவ்யாவுக்கு, தன் மீது வீண் சந்தேகம் என்றும், செல்லம்மா சீரியல் நடிகை முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் தன்னை சேர்த்து வைத்து பேசுகிறார், சந்தேகப்படுகிறார், தவறாக புரிந்து கொண்டு தினமும், அந்த நடிகையையும் என்னையும் அசிங்கமாக பேசி மனரீதியாக துன்புறுத்துகிறார்.
திவ்யாவின் தேவையில்லாத சந்தேகமே இந்த பிரச்சனைக்கு முழுக்காரணம் என்றும், எல்லா பிரச்சனையை தாண்டியும் எனக்கு திவ்யாவுடன் சேர்ந்து வாழவே ஆசை என அர்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள திவ்யா கூறியதாவது:-
அர்ணவுக்கு ஏற்கனவே பல பெண்களோடு தொடர்பு இருந்ததாகவும், அதுவும் ஒரு பெண் அர்ணவ் பணம் வாங்கி தன்னை ஏமாற்றி விட்டதாக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருப்பதாக நடிகை திவ்யா தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசியாவில் இருக்கும் ஒரு பெண்ணும் இவரும் காதலித்து பிரிந்த பிறகு அர்ணவ் பணம் கேட்டு அந்த பெண்ணை தொந்தரவு செய்ததாகவும் தற்போது அந்த பெண் திவ்யாவிடம் ஆதாரங்களை கொடுத்திருப்பதாகவும் திவ்யா பரபரப்பாக ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனிடையே, சக நடிகைகளும் அர்ணவ் குறித்து நல்லமாதிரியான கருத்துகளை சொல்லவில்லை.
நடிகை திவ்யவின் பேட்டியை தொடர்ந்து அர்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திவ்யா கூறும் குற்றச்சாட்டை மறுக்கும் அர்ணவ், நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து திவ்யாதான் தனது குழந்தையை கலைக்க பார்க்கிறார் என்றும், திவ்யா தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
தனது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணம் திவ்யாவின் நண்பர் ஈஸ்வர்தான் என்றும், தன் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பது போல் தன்னுடன் பேசுவதாகவும், அப்போது மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
நானும் சேரியில் பிறக்கவில்லை, அவரும் சேரியில் பிறக்கவில்லை. அவர் படித்தவர், இது போல் பேசலாமா என்று அர்ணவ் கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னதாக, மனைவியை துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அர்ணவ் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டார்.
பட்டியலின மக்கள் என்றால் படிக்காதவர்கள், கொச்சை வார்த்தைகளை பேசுவார்கள் என்ற பொருள்படும்படி கூறிய அர்ணவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் விரைவில் அர்ணவை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.