பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிக்கு திருமணம்… வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வீடியோவை வெளியிட்ட நபர் கைது ; திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!

Author: Babu Lakshmanan
11 October 2022, 12:44 pm

கடலூரில் சீருடையில் இருந்த பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டிய வீடியோவை வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சி வெங்காயதலமேடு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவியும், வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவனும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்த நிலையில், சிதம்பரம் காந்தி சிலை அருகே சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கான மினி பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. பயணிகள் வசதிக்காக அங்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் நண்பர்கள் சூழ்ந்திருக்க, அந்த மாணவிக்கு மஞ்சள் கயிற்றை தாலியாக அந்த மாணவர் கட்டியுள்ளார். அப்போது, முகம் முழுவதும் சிரிப்பு மலர, வெட்கத்தில் முகத்தைப் பொத்திக் கொண்டு அந்த மாணவி அதை ஏற்றுக் கொள்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பாலாஜி கணேஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?