கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹவுஸ்மேட்ஸ்.. செம கடுப்பில் கத்திய ரச்சிதா.. ஆரம்பித்தது “பிக்பாஸ்” தகராறு..!
Author: Vignesh11 October 2022, 6:00 pm
விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸூக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு தான். இதன் காரணமாக அடுத்ததடுத்த சீசன்கள் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதனுடைய Grand Opening சமீபத்தில் ஒளிபரப்பானது. 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனின் இரண்டாவது நாளான இன்று நான்கு அணிகளாக பிரிந்து விளையாடும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் இன்று நடந்து வரும் போட்டியில் போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்படும் விதமாக Promo வெளியாகி உள்ளது. இதில் முதல் முறையாக ஜி.பி. முத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேசியுள்ளார்.
இந்த வாக்குவாத்தில் ஈடுபட்ட மற்றொரு போட்டியாளரான ரச்சிதா, திடீரென மைக் முன்பு நின்று கொண்டு சத்தமாக காத்துக்குகிறார்.
நிகழ்ச்சியின் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கினால் அப்படி கத்தினாரா? அல்லது கோபத்தில் அப்படி கத்தினாரா? என்று இன்று எபிசோடில் பார்த்தால் தான் தெரியவரும்.