ரஜினிக்கு நான்கு முறை ‘நோ’ சொன்ன பிரபல நடிகை..! கடைசியில் இணைந்ததற்கு இது தான் காரணமா..!

Author: Vignesh
12 October 2022, 12:00 pm

நாடக திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிக்கத் தொடங்கி 1975 ஆம் ஆண்டு அபூர்வராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தன்கையில் வைத்திருந்தவர் நடிகர் ரஜினிகாந்த். மேலும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் முள்ளும் மலரும், முத்து, பாட்ஷா, அண்ணாமலை, தளபதி , படையப்பா, மூன்று முகம், சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், அண்ணாத்த, நல்லவனுக்கு நல்லவன் போன்ற ஏராளமான திரைப்படங்களில், நடித்துள்ளார். தாதா சாகேப் பால்கே விருது 2019 ஆம் ஆண்டில் பெற்றிருந்தார்.

Rajini_updatenews360.jpg 2

நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்து வெளிவந்த அண்ணாத்த என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.

இதை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியாக அமைந்தது.

Rajini_updatenews360.jpg 2

மேலும், எந்திரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து இருப்பார். ஆனால், இதற்கு முன்பாக 4 திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் கதாநாயகியாக முதலில் நடிகை ஐஸ்வர்யாராய் தான் நடிக்க கேட்டதாகவும், ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டாராம்.

அதிலும் முதலில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் படையப்பா திரைப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார்கள்.

Rajini_updatenews360.jpg 2

அதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம். அதனைதொடர்ந்து பாபா, சந்திரமுகி, சிவாஜி போன்ற திரைப்படங்களில் கேட்டதாகவும், அப்போதும் ஒரு சில காரணத்தினால் ஐஸ்வர்யாராய் நடிக்க முடியாது என்று நிராகரித்து விட்டாராம். அதன் பிறகுதான் சங்கர் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் எந்திரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!