சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் புகுந்த சாரைப் பாம்பு : அரசு விழாவில் அதிர்ச்சி.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2022, 4:00 pm

விழுப்புரம் அருகே சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழாவில் திடீரென கூட்டத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரூபாய் ஒரு கோடியே 33 லட்சம் மதிப்பிலான மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசு திட்டங்கள் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் முத்துரா வங்கி கடன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் மருத்துவம் கல்வி ஆகியவற்றில் பூர்த்தி செய்யும் வகையில் இல்லம் தேடி கல்வி இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் மோகன் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்திற்கு நடுவே பாம்பு புகுந்ததால் அமர்ந்திருந்த பெண்கள் அலறியடித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் பாலிதீன் பையை கையில் மாட்டிக் கொண்டு பாம்பை லாவகமாக பிடித்து எடுத்துச் சென்றனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 453

    0

    0