வட இந்தியாவிலும் பணிகளை விரிவுபடுத்தும் KCP நிறுவனம்… Zetwerk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!!

Author: Babu Lakshmanan
12 October 2022, 9:26 pm

சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக Zetwerk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் KCP நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் KCP Infra Limited நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தென்னிந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட திட்டங்களை சிறப்பான முறையில் முடித்துக் கொடுத்ததால், பல விருதுகளையும், பல்வேறு மாநில அரசுகளின் பாராட்டுக்களையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல், தெலங்கானா, ஆந்திராவில் மத்திய அரசின் மிலிட்டரி என்ஜினியரிங் சர்வீசஸ் துறையில் அதிசிறந்த உள்கட்டமைப்பு ஒப்பந்ததாரருக்கான உரிமத்தையும், தமிழகம், கேரளாவில் முன்னணி சிவில் ஒப்பந்ததாரருக்கான உரிமத்தையும் KCP நிறுவனம் பெற்றுள்ளது.

இதுவரையில் தென்னிந்தியாவில் மட்டும் பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக செய்து வந்த KCP நிறுவனம், தனது பணிகளை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக, உலகத் தரம் வாய்ந்த Zetwerk manufacturing business Pvt Ltd நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் KCP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சந்திரபிரகாஷ் மற்றும் Zetwerk நிறுவனத்தின் ஆர். பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5000 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய உள்கட்டமைப்பு பணிகளை இருநிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள இருக்கிறது.

இது குறித்து KCP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சந்திர பிரகாஷ் பேசுகையில், “KCP நிறுவனம் தென்னிந்தியாவில் உள்ள 4 மாநிலங்களில் பல்வேறு திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில், 5,000க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிகவும் துடிப்பான நிறுவனமான இருக்கும் எங்களின் நிறுவனம், இனி வரும் ஆண்டுகளில் புதிய உச்சத்தை தொடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை,” எனக் கூறினார்.

Zetwerk நிறுவனமானது 15 நாடுகளில் சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • gangers movie beat good bad ugly single day collection குட் பேட் அக்லிக்கு மூடு விழா நடத்திய கேங்கர்ஸ்? கடைசில இப்படி ஆகிடுச்சே!