கஞ்சாவை விற்பனைக்கு எடுத்துச் சென்ற கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்… 12 கிலோ கஞ்சா பறிமுதல்.. 3 பேர் கைது..!!
Author: Babu Lakshmanan13 October 2022, 3:25 pm
கோவை ; அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு சென்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் அன்னூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்ற கேரளாவைச் சேர்ந்த சதீஷ்குமார் (34), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி (30) மற்றும் சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (33) ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 12 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் நான்கு சக்கர வாகனம் (Travels Van), இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.