இரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ.. வெடித்து சிதறிய பரபரப்பு காட்சி : அலறி ஓடிய பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2022, 9:00 pm

கோவையில் இரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு கெமிக்கல் வெடித்து சிதறும் பரப்பான காட்சி வெளியாகியுள்ளது.

கோவை சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் ஆர்பிகே இரசாயன (கெமிக்கல்) தொழிற்சாலை செயல்ப்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி செய்து கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அங்கு இருந்த கெமிக்கல் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் ஏற்பட்ட தீ அங்கு இருந்த இரசாயனம் முழுவதும் பரவி மல மலவென தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இருந்த இரண்டு கெமிக்கல் ட்ரம் வெடித்து சிதறியது.இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். தற்போது வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் தொழிற்சாலை முழுவதும் எரிந்து நாசமாகியது.

https://vimeo.com/760348612

அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலையை விட்டு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…