பணி ஆணை வழங்க ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம்… வசமாக சிக்கிய ஊராட்சிகள் உதவி இயக்குநர்.. ரூ. 6.68 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!!

Author: Babu Lakshmanan
15 October 2022, 9:01 am

விருதுநகர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் பணி ஆணை வழங்குவதற்கு லஞ்சம் பெறுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

vigilance raid - updatenews360

இதன் அடிப்படையில் நேற்று இரவு ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமா சங்கரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

vigilance raid - updatenews360

இதனைத் தொடர்ந்து, இன்று காலை சூலக்கரை மேடு திருமலை மன்னர் நகர் முதல் தெருவில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநர்உமாசங்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

vigilance raid - updatenews360

உமாசங்கரின் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு முறையான கணக்குகள் காட்டவில்லை. இருப்பினும், நேரடியான புகார் இல்லாததால்அவர் கைது செய்யப்படவில்லை. அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யயப்பட உள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 621

    0

    0