‘தாயில்லாமல் நான் இல்லை’… 100 நாள் வேலையின் போது தாய்-க்கு மாரடைப்பு… அதிர்ச்சியில் மகனும் பலி..!!

Author: Babu Lakshmanan
15 October 2022, 10:23 am

வேலூர் ; 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்த தாய் மாரடைப்பில் உயிரிழந்த அதிர்ச்சி கேட்டு அவரது மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சாமன். இவரது மனைவி பெரியதாயி. இவர்களது மகன் சிகாமணி கூலி தொழிலாளி. மேலும், இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால், மகன் சிகாமணி உடன் வசித்த பெரியதாயி 100 நாள் வேலை செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் சாத்கர் ஊராட்சி கொண்டமல்லி கானாறு நீரோடையில் 100 நாள் வேலையில் பெரியதாயி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உடனே அங்கு இருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெரிய தாயின் மகன் சிகாமணிக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில், அவரும் மயங்கி விழுந்து இறந்தார். இதனால், சிகாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!