#ArrestKohli.. டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்.. இந்தியாவையே அதிர வைத்த தமிழகத்தில் நடந்த சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
15 October 2022, 2:20 pm

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவதூறாக பேசிய நபரை சக நண்பனே படுகொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து, டுவிட்டரில் கோலியை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னையில் பிளம்பிங் வேலை செய்து வந்துள்ளார். விக்னேஷும், அவரது நண்பர் தர்மராஜும் இரவு ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி குறித்து இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

மதுபோதையில் பேசிய விக்னேஷ், உன்னைப்போலத்தான் உன் ஆட்களும் இருக்கிறார்கள் என இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பொறுமை இழந்த தர்மராஜ் நண்பன் என்றும் கூட பார்க்காமல் விக்னேஷை ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் வீரர்களுக்காக சக நண்பனையே ஒருவர் கொலை செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

https://twitter.com/IAMSONIYA787/status/1581141622909042689

இந்த நிலையில், சமூக வலைதளமான டுவிட்டரில் #ArrestKohli எனும் ஹேஷ்டேக்கை கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ரோகித் ஷர்மா மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் ரொம்ப கோபக்காரர்கள் என்பதைப் போல, மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 692

    0

    0