ஒரு மாநிலத்தில் கிரிமினல் சம்பவம் நடக்கத்தான் செய்யும்.. அதை தாண்டி அரசு எப்படி செயல்படுது என்பதை பார்க்கணும் : அமைச்சர் மனோ தங்கராஜ்!!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2022, 2:31 pm
சென்னையில் கல்லூரி மாணவி ரயிலில் தள்ளி விட்டு கொலைசெய்யப்பட்ட விவகாரம். தமிழகத்தில் கிரிமினல் ஆக்டிவிட்டி நடக்க தான் செய்யும். அதை தாண்டி அரசு எப்படி செயல்படுகிறது என்பதை தான் மக்கள் பார்க்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தக்கலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர் சென்னை மாணவி சத்தியா கொலை செயப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது கிரிமினல் ஆக்டிவிட்டி என்பது அது நடந்து கொண்டு தான் இருக்கும்.
அதை தாண்டி அரசு குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கும். இந்த நிலையில் விரைவில் தண்டனை வழங்கப்படும். அதே போன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதை தடுக்க இங்கு கொக்கரித்து கொண்டிருக்கும் பாஜக – வினர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.
என்னென்றால் இது வெளியறவு துறை விவகாரம். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்றக்குழு இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் செவிசாய்க்கவில்லை என அவர் தெரிவித்தார்