கல்குவாரியில் பள்ளி மாணவி சடலமாக மீட்பு… உடன் வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் யார்? மர்ம மரணம் குறித்து போலீசார் திடுக்கிடும் தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2022, 2:45 pm
திருப்பூர்: 9ம் வகுப்பு மாணவி கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்கி 9ம் வகுப்பு பயின்று வரும் 14வயது சிறுமி கடந்த 12 ம் தேதி முதல் காணவில்லை என சிறுமியின் தந்தை திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள பாறைக்குழி (கை விடப்பட்ட கல்குவாரியில் தேங்கி உள்ள நீரில் ) நீரில் மூழ்கி சடலமாக மாணவியின் உடல் மீட்கப்பட்டது.
விசாரணையில் மாணவி உடன் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி குளிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 சிறுவர்களிடமும் திருமுருகன் பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறுமியின் உடலை உடற்கூறாய்வு சோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.